என் குரல்! » நம் தவறுகள்

இதுதான் பலகலையின் லட்சணமா?
கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க

அதற்குத் தக

கொஞ்சம் பொறுங்கள்… குறளைப் படித்துவிட்டு என்னைத்திட்டாதீர்கள். நான் சொல்வது நம் நாட்டின் கல்விநிலையை அன்று திருவள்ளுவர் கண்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.

பாரதியார் பல்கலைக்கழத்தின் சமீபத்திய வீர விளையாட்டுக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வேலைக்குச் செல்லும் இளம்வயதினர் முதல் மூத்தோர் வரை அனைவரும் தன் விட்டுப்போன படிப்பைத்தொடர உதவுவதுதான் தொலைக்கல்வி இயக்கம். சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன (நான் இதை எழுதும்போது, ஆதாவது ஜுன் 10, 2008 ) இந்த பாடங்களைப் படிக்கும் மாணவர்களில் என்னுடன் பணியாற்றும் நண்பர்கள் சிலரும் உண்டு. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று நாள் முன்னதாக பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் ஓர் அறிவிப்பு வெளியானது.  SDE – Examinations scheduled to be held on 07.06.2008 is postponed (7ம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன) என்ற அறிவிப்புதான் அது. (முழு அறிவிப்பு: பார்க்க படம்) இதனைப்பார்த்த என் நண்பர்களும் 14ம் தேதிக்கு அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று நினைத்து தன் விடுப்பு விண்ணப்பங்களை மாற்றிக் கொண்டனர். இரண்டு நாள் கழித்து இன்று காலை அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது அன்று அவர்களுக்கு தெரியவில்லை. 7ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒன்றுமட்டும் 14ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் இரண்டு தேர்வுகளும் நேற்று (9-6-2008 ) மற்றும் முந்தாநேற்று (8-6-2008 ) நடந்துமுடிந்துவிட்டதாகவும் சிலர் சொல்லக் கேட்டு அழுகாத குறைக்குத் தள்ளப்பட்டனர்.  Examinations for the students admitted during 2007-08 Academic year (Annual Pattern) will be held on 14.06.2008. இந்த அறிவிப்பைப் பார்த்த அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டும் அதே பதில்தான் வந்திருக்கிறது. ஆங்கிலமே தெரியாத தற்குறிகளைப் பணியில் அமர்த்தினால் இப்படித்தான் ஆகும் என்று மண்டையில் அடித்துக்கொண்டு போகிறார்கள் சில பொறுப்புள்ள ஆசிரியர்கள். Examinations என்றால் பன்மை என்று இவர்களுக்குத் தெரியாதா? இல்லை அன்று இரண்டு தேர்வுகள் இருந்திருக்குமேயானால் அன்றையதேர்வு மட்டும் மாற்றப்பட்டதாகத் தெளிவாக எழுதத்தெரியாதா இந்த முட்டாள்களுக்கு!

இப்படிப்பட்ட அக்கறையில்லாத மனிதர்களை என்ன செய்வது. மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட இவர்களுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ… இவர்களை மனதுக்குள் ஒருமணிநேரம் திட்டித்தீர்ப்பதைத் தவிர நாம் என்னதான் செய்யமுடியும். இந்தியாவில் இப்படி எத்தனையோ பொக்கனாத்தி பல்கலைக்கழகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என்னங்க கவலை. மாணவர்களிடம் காசு பார்க்க விதவிதமான பாடத்திட்டங்களைக் கொண்டுவரத்தான் இவர்களுக்குத் தெரியும். தன்னிடம் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒழுங்கான முறையில் வேலை செய்கிறார்களா என்று பார்க்கக்கூட துப்பு இல்லாத இந்தப் பல்கலைக்கழகங்களில் நாமெல்லாம் படித்தோம் என்றால் வெக்கமாக இருக்கிறது.

பல்கலைக்கழகம் கட்ட நிலம் கொடுத்த பெருமான்கள்தானே இங்கு பரம்பரை பரம்பரையாக பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் நிலங்களுக்கான நியாயவிலையைக் கொடுத்து வாங்கியிருந்தால் அரைகுறைப் படிப்புப் படித்த அவர்களுக்கு வேலை தரவேண்டிய கட்டாயம் பல்கலைக் கழகத்துக்கு வந்திருக்காது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இடம்வாங்கிய கடனுக்காக வேலை கொடுத்தால் அவர்கள் கடனுக்குத்தான் வேலை செய்வார்கள்.

கடமைக்கு எங்கே செய்யப்போகிறார்கள். பல ஞானிகளைப் பெற்றெடுத்த பாரதியார் பல்கலைக்கழகம் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கிறது.

எல்லாம் விதி! வேறென்ன சொல்ல?

அளவுக்கு மிஞ்சினால்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது. தொடர்ந்து படிக்கவும்…

தமிழ் என்றாலே இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த பிணைப்பு என்பதை தொன்றுதொட்டு நாம் அறிந்து வந்திருக்கிறோம். தமிழ்ப்பாடங்களைக்கூட பாடல்களாகவும் நாடகமாகவும் தான் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தின் இன்றைய வடிவம்தான் திரைப்படங்கள். ஆனால் அவைகள் பல்கலைக்கழகங்களாலேயே தடை செய்யப்படும் அளவுக்கு கேவலமான நிலையை அடைந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து கடைசியில் அசிங்கம், ஆபாசத்தின் மொத்த உருவமாக இன்றைய திரைத்துறை வந்துவிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களைத் தவிர எல்லா மொழிமக்களும் நடிக்கிறார்கள். தமிழ் மொழியைத்தவிர எல்லா மொழி வாசகங்களையும் போட்டுப் பாட்டு எழுதுகிறார்கள். பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்கிறார்கள் அதுவும் வரிவிலக்குக்காக மட்டும்தான். கேவலமான அரசாண்மைக்கு இந்த வரிவிலக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெயர் மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படத்தில் ஒருவர் வாயிலும் அழகான தமிழ் வார்த்தைகள் வரவில்லை.

பல்(கலை)க் கழகங்கள் தங்களுடன் இணைந்துள்ள கல்லூரிகளில் விழாக்களின் போது தமிழ் திரைப்படப்பாடல்களே இடம்பெறக்கூடாது என்று சட்டம் போடுமளவுக்கு இந்தப்பாடல்களில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. இது போதாது என்று திரைப்பட நாயகர் நாயகிகளையும் அழைத்து அவர்களை ஆடவைக்கின்றன பல கல்லூரிகள், உதாரணமாக கோவையிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியைச் சொல்லலாம்.

அவர்களோடு சேர்ந்து நடனமாட கல்விகற்கவந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப் படுகிறது. அது அளவுக்கு மீறிப் போனதால் தான் இந்தத் தடை உத்தரவு வந்திருக்கிறது. எவ்வளவோ அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் மற்றும் பல மாமனிதர்களை அழைக்க இவர்களுக்குத் தோன்றவில்லை!

இப்போது அந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கே தடை உத்தரவு வந்திருக்கிறது எதற்குத் தெரியுமா? இளம்பொறியியல் (B.E., B.Tech.) படிப்புகளை அளிக்கும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் இளம் அறிவியல் (B.Sc) படிப்புகளை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கக்கூடாதென்று. ஏதோ ஒருசில புராதானக் கல்லூரிகள் B.Sc. CT, B.Sc., IT, M.Sc., CT, M.Sc., IT போன்ற பட்டப்படிப்புகளை அளித்து வந்தன. உதாரணத்துக்கு PSG Tech, CIT போன்ற கல்லூரிகளைச் சொல்லலாம்.

கோவை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டவுடன் அதற்குத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திரு. இராதா கிருட்டினன் என்ற மனிதரால் வந்தது இந்த வினை. தான் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கிய பதவியை வைத்து, விட்ட காசைத் திரும்ப எடுக்கும் நோக்கில் எல்லாக் கல்லூரிகளையும் இந்த இரண்டுங் கெட்டான் பட்டப் படிப்புகளைப் பெற விண்ணப்பிக்குமாறு உசுப்பிவிட்டார். கல்வியைக் காசாக்கும் நோக்கத்தில் முளைத்துவிட்ட கல்லூரிகளும் மேலும் மேலும் காசாசை கொண்டு அந்தப்பட்டப்படிப்புகளைப் பெற்றன. 2007ம் ஆண்டு இறுதியில் ஏறக்குறைய கோவையிலுள்ள அனைத்து பொறியியற் கல்லூரிகளும் இந்த இளைநிலை அறிவியல் (B.Sc., CT, IT)படிப்புகளைப் பெற்றுக் காசுவாங்க ஆரம்பித்துவிட்டன. அந்த அனுமதிவழங்க துணைவேந்தர் அய்யா நிறைய வாங்கி, விட்ட காசையும் சம்பாதித்துக் கொண்டார். 2008ம் ஆண்டுக்கான வசூல் வேட்டையை கல்லூரிகள் ஆரம்பிக்கும் வேளையில் வந்தது புதிய ஆப்பு. ஆப்பு வைத்தது பாரதியார் பல்கலைக்கழகம். இந்தமாதிரி அறிவியல் பட்டங்களை பொறியியல் கல்லூரிகளில் அளித்தால் தன்னிடமிருக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டுதான் போகவேண்டும் என்று ஒரு வழக்கைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவியல் இளநிலை முதுநிலைப் பட்டங்களை வழங்க தடை உத்தரவு வந்தேவிட்டது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறியியல் கல்லூரிகள் நடத்திய இந்தப் படிப்புக்களை இத்தனை கல்லூரிகள் போட்டிபோட்டு மலிவாக்கியதன் விளைவுதான் இது. பல கல்லூரிகள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைக் கூட ஆரம்பித்துவிட்டன. இப்போது அவர்களுக்குக் காசைத் திரும்பக் கொடுத்தார்களா இல்லை பொறியியல் பாடத்திற்கு அனுமதி தந்தார்களா என்று தெரியவில்லை.

ஆனாலும் அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரிகள் பல உள்ளதால் அவர்களின் நன்மைக்காக இந்தத் தடை விரைவில் நீக்கப்படும் என்பது திண்ணம்.

“கேடுகெட்ட ஊருக்கு கூறுகெட்ட மணியகாரன்” என்கிற கதைதான் இது! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.

பிச்சைக்காரர்களா இவர்கள்!
என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை இயந்திரம், துணிநேர்த்திப்பெட்டி, ஒளிபடவட்டு (CD/DVD) இயக்கி முதலானவைகளும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியுமா…?

பிச்சை எடுப்பது!

ஆம். ஆச்சரியமாக இருக்கிறதா…? கேட்டதும் நொந்து போனேன். தினமும் காலை எழுந்து குளிக்கமாட்டார்கள். பழைய பிய்ந்துபோன துணியை அழகான கைப்பைகளில் எடுத்துக்கொண்டு பிரமாதமான உடைகளில் வீட்டைவிட்டு வெளியேறி கோவையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்கள் கூட்டம் மிகுந்துள்ள திருப்பூர் நகரத்துக்குச் சென்று பழைய உடைகளை மாற்றிக்கொண்டு பரவலாகப் பிரிந்து பிச்சை எடுக்க ஆரம்பிப்பார்களாம். இந்தத் தொழிலில்(!) தாய், தந்தை, மகன்கள், மகள்கள் மற்றும் மருமகள்கள் சகிதம் ஈடுபட்டுள்ளார்கள்.

குழந்தைகள் மட்டும் பிரமாதமான சீருடையணிந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள். அவர்களின் குடும்பத்தில் மொத்த மாதவருமானம் என்ன தெரியுமா நண்பர்களே….? 30,000 முதல் 40,000 வரை.

இந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்வது. கோயில் குளங்களில், பேருந்து நிறுத்தங்களில், மக்கள் நெருக்கம் மிகுந்த கடைவீதிகளில் போவோர் வருவோரிடமெல்லாம் காசுகேட்டு நச்சரிக்கும் மனிதர்களைப் பார்த்தால் கொஞ்சம் கவனத்தைச் செலுத்துங்கள். இருவரில் ஒருவர் உங்களைவிட அதிகமாகச் சம்பாதிப்பவராகத்தான் இருப்பார். பணக்காரர்களின் வருகை எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கேதான் இவர்கள் அதிகம் மொய்க்கிறார்கள். சர்வ சாதாரணமாக 10 ரூபாய், 20 ரூபாய்த்தாள்களை எடுத்துக் கொடுப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

பிச்சைக்காரர்கள் பெருகுவதற்குக் காரணம் தெரிகிறதா… ஒருகாலத்தில் பழைய மற்றும் மீந்துபோன உணவைப்பெற்றுக்கொள்ள வந்த பிச்சைக்காரர்களை இப்போது நீங்கள் பார்க்க முடிகிறதா? இப்போதெல்லாம் இவர்கள் 1ரூபாய்க் காசை வாங்க மறுக்கிறார்கள். அல்லது வாங்கிவிட்டு ஏசிவிட்டுப்போகிறார்கள்.

இவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று சொல்லிப்பாருங்கள் உங்களைத் திட்டிவிட்டுத்தான் போவார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி கூடச்சொல்வார்கள்.

தினமும் பிச்சையிடும் ஒரு பெண்மணி அன்று உணவு மீந்துவிடாத காரணத்தால் பிச்சையிடவில்லையாம். ஆனால் எப்போதும் போடாத ஒரு பெண்மணி அன்று மீந்துபோனதைப் போட்டாளாம். அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம் “எப்போதும் போடாத மகராசி இன்னைக்கு பிச்சையிட்டாள், ஆனால் எப்போதும் போடும் கழுதை இன்றைக்குப் பிச்சை போட மறுத்தாள்” என்று.

ஆக பிச்சையிடுவதால் புண்ணியம் கிடைக்குமென்று நீங்கள் நினைத்தால் போய் அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு நன்கொடை கொடுங்கள். அதுதான் புண்ணியம். வீணாக இந்தக் கோடீஸ்வரப் பிரபுக்களுக்குக் கொடுத்துப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!