கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க
அதற்குத் தக
கொஞ்சம் பொறுங்கள்… குறளைப் படித்துவிட்டு என்னைத்திட்டாதீர்கள். நான் சொல்வது நம் நாட்டின் கல்விநிலையை அன்று திருவள்ளுவர் கண்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.
பாரதியார் பல்கலைக்கழத்தின் சமீபத்திய வீர விளையாட்டுக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வேலைக்குச் செல்லும் இளம்வயதினர் முதல் மூத்தோர் வரை அனைவரும் தன் விட்டுப்போன படிப்பைத்தொடர உதவுவதுதான் தொலைக்கல்வி இயக்கம். சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன (நான் இதை எழுதும்போது, ஆதாவது ஜுன் 10, 2008 ) [...]
Archive for the 'நம் தவறுகள்' Category
இதுதான் பலகலையின் லட்சணமா?
ஜூன் 10, 2008அளவுக்கு மிஞ்சினால்
மே 7, 2008அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது. தொடர்ந்து படிக்கவும்…
தமிழ் என்றாலே இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த பிணைப்பு என்பதை தொன்றுதொட்டு நாம் அறிந்து வந்திருக்கிறோம். தமிழ்ப்பாடங்களைக்கூட பாடல்களாகவும் நாடகமாகவும் தான் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தின் இன்றைய [...]
பிச்சைக்காரர்களா இவர்கள்!
ஏப்ரல் 4, 2008என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை இயந்திரம், துணிநேர்த்திப்பெட்டி, ஒளிபடவட்டு (CD/DVD) இயக்கி முதலானவைகளும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியுமா…?
பிச்சை எடுப்பது!
ஆம். ஆச்சரியமாக இருக்கிறதா…? கேட்டதும் நொந்து போனேன். தினமும் காலை [...]