என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

என்குரலின் நோக்கம்!

சில நேரங்களில் உண்மையை, உணர்வை, உரிமையைச் சொன்னால் சிலர் புரிந்துகொள்வர். ஆனால் பல நேரங்களில் சொல்லித் தாக்க வேண்டியிருக்கிறது…. யாருக்கும் பயமின்றி பல கருத்துக்களை காரசாரமாக வெளியிடவிருக்கிறேன் இந்தப் வலைப்பூவில்…

உங்களில் யாரையேனும் நான் குறிப்பிட்டுச் சொல்வதாக நினைத்தால் அதற்கு அவரவர் செயலே காரணமாக இருக்க வேண்டுமென்று எண்ணி தன்னைத் தானே திருத்திக்கொள்ளவும். இந்த வலைப்பதிவுகளில் உள்ள கருத்துக்கள் யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை! சமுதாயத்தில் உள்ள அவல நிலைகளின் மொத்த பிம்பங்கள் இவைகள். இந்தப் பிரதிபலிப்புக்கள் மூலம் ஒருவராவது தன் தவறை/தவறுகளை உணருவாராயின் அந்த வெற்றி இந்த வலைப்பூவினை விரும்பிப்படிக்கும் உங்களையே சாரும். மறக்காமல் அதனை பதிலாகப் பதியுங்கள். அல்லது எனக்கு அனுப்பிவையுங்கள். அதனை வெளிடக்கடமைப் பட்டுள்ளேன்.

என்னைத் தொடர்புகொள்ள technicalganesh@rediffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது உங்கள் கருத்துக்களை பதிலாக இங்கு பதியுங்கள்.

நன்றிகளுடன்

கணேஷ்

No Responses Yet to “என்குரலின் நோக்கம்!”

Leave a Reply