என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

Archive for ஜூலை, 2008

ஒரே கேள்வி?

ஜூலை 29, 2008

அணு ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், அதில் சொல்லப்படுகின்ற பிரச்சனைக்குரிய பாகங்கள் என்னவென்று சொல்லி அதற்கு தீர்வையும் கண்டு சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்று அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டிருந்தது அனைவரும் அறிந்த உண்மை. இதுவரை பிரச்சனைகள் என்னவாயிருந்தாலும் அங்கு அதற்குக் காரண்மாக இருப்பது கம்யூனிஸ்ட்டுகளாயிருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு தீரம். எதிர்க்கட்சியான பாரதீய சனதாக் கட்சியே எதிர்க்காத போது இவர்களுக்கு தீரர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு அது பயன்பட்டிருக்கிறது. இந்தியாவில் [...]

ஒரு வாசகரின் குமுறல்

ஜூலை 11, 2008

ஒரு தனி மனிதனின் குமுறல்
என்குரல் வாசகர் திரு சக்திவேல் எழுதிய கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.
என் குரல் வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்…
நம் வாழ்வில் நடக்கும் உண்மைச்சம்பவங்கள் பெரும்பாலானவை கசப்பான உணர்வுகளையே நமக்குத்தருவது இயற்கைதான். ஆனாலும் தாங்கிக்கொள்ள முடியாத பல செய்திகளும் நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் உள்ளம் குமுறுகிறது. அந்தக் குமுறல்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதன் நோக்கம் மக்களின் விழிப்புணர்வை அதிகமாக்குவதே அன்றி யாரையும் புண்படுத்துவதல்ல.
“பொதுக்காரியங்களிலே ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் [...]