என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

இதுதான் பலகலையின் லட்சணமா?

கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க
அதற்குத் தக

கொஞ்சம் பொறுங்கள்… குறளைப் படித்துவிட்டு என்னைத்திட்டாதீர்கள். நான் சொல்வது நம் நாட்டின் கல்விநிலையை அன்று திருவள்ளுவர் கண்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.

பாரதியார் பல்கலைக்கழத்தின் சமீபத்திய வீர விளையாட்டுக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வேலைக்குச் செல்லும் இளம்வயதினர் முதல் மூத்தோர் வரை அனைவரும் தன் விட்டுப்போன படிப்பைத்தொடர உதவுவதுதான் தொலைக்கல்வி இயக்கம். சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன (நான் இதை எழுதும்போது, ஆதாவது ஜுன் 10, 2008 ) இந்த பாடங்களைப் படிக்கும் மாணவர்களில் என்னுடன் பணியாற்றும் நண்பர்கள் சிலரும் உண்டு. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.BU
மூன்று நாள் முன்னதாக பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் ஓர் அறிவிப்பு வெளியானது. SDE – Examinations scheduled to be held on 07.06.2008 is postponed (7ம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன) என்ற அறிவிப்புதான் அது. (முழு அறிவிப்பு: பார்க்க படம்) இதனைப்பார்த்த என் நண்பர்களும் 14ம் தேதிக்கு அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று நினைத்து தன் விடுப்பு விண்ணப்பங்களை மாற்றிக் கொண்டனர். இரண்டு நாள் கழித்து இன்று காலை அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது அன்று அவர்களுக்கு தெரியவில்லை. 7ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒன்றுமட்டும் 14ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் இரண்டு தேர்வுகளும் நேற்று (9-6-2008 ) மற்றும் முந்தாநேற்று (8-6-2008 ) நடந்துமுடிந்துவிட்டதாகவும் சிலர் சொல்லக் கேட்டு அழுகாத குறைக்குத் தள்ளப்பட்டனர். Examinations for the students admitted during 2007-08 Academic year (Annual Pattern) will be held on 14.06.2008. இந்த அறிவிப்பைப் பார்த்த அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டும் அதே பதில்தான் வந்திருக்கிறது. ஆங்கிலமே தெரியாத தற்குறிகளைப் பணியில் அமர்த்தினால் இப்படித்தான் ஆகும் என்று மண்டையில் அடித்துக்கொண்டு போகிறார்கள் சில பொறுப்புள்ள ஆசிரியர்கள். Examinations என்றால் பன்மை என்று இவர்களுக்குத் தெரியாதா? இல்லை அன்று இரண்டு தேர்வுகள் இருந்திருக்குமேயானால் அன்றையதேர்வு மட்டும் மாற்றப்பட்டதாகத் தெளிவாக எழுதத்தெரியாதா இந்த முட்டாள்களுக்கு!

இப்படிப்பட்ட அக்கறையில்லாத மனிதர்களை என்ன செய்வது. மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட இவர்களுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ… இவர்களை மனதுக்குள் ஒருமணிநேரம் திட்டித்தீர்ப்பதைத் தவிர நாம் என்னதான் செய்யமுடியும். இந்தியாவில் இப்படி எத்தனையோ பொக்கனாத்தி பல்கலைக்கழகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என்னங்க கவலை. மாணவர்களிடம் காசு பார்க்க விதவிதமான பாடத்திட்டங்களைக் கொண்டுவரத்தான் இவர்களுக்குத் தெரியும். தன்னிடம் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒழுங்கான முறையில் வேலை செய்கிறார்களா என்று பார்க்கக்கூட துப்பு இல்லாத இந்தப் பல்கலைக்கழகங்களில் நாமெல்லாம் படித்தோம் என்றால் வெக்கமாக இருக்கிறது.

பல்கலைக்கழகம் கட்ட நிலம் கொடுத்த பெருமான்கள்தானே இங்கு பரம்பரை பரம்பரையாக பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் நிலங்களுக்கான நியாயவிலையைக் கொடுத்து வாங்கியிருந்தால் அரைகுறைப் படிப்புப் படித்த அவர்களுக்கு வேலை தரவேண்டிய கட்டாயம் பல்கலைக் கழகத்துக்கு வந்திருக்காது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இடம்வாங்கிய கடனுக்காக வேலை கொடுத்தால் அவர்கள் கடனுக்குத்தான் வேலை செய்வார்கள்.
கடமைக்கு எங்கே செய்யப்போகிறார்கள். பல ஞானிகளைப் பெற்றெடுத்த பாரதியார் பல்கலைக்கழகம் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கிறது.

எல்லாம் விதி! வேறென்ன சொல்ல?

11 Responses to “இதுதான் பலகலையின் லட்சணமா?”

  1. கண்டிப்பாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இன்று இது இருவரின் வாழ்வில் பிரச்சனை கொடுத்திருக்கலாம்… ஆனால் நாளை இதன் முடிவு…?

  2. என்ன செய்யறது எல்லாம் நம் விதி

  3. என்ன கொடுமை இது!! இது கூடவா அவர்களுக்கு தெரியல? ஒரு தேர்வு தான் மாற்றப்பட்டுள்ளது மற்றவை தேர்வின் அட்டவணைப் படி என அவர்கள் தெளிவாகவே சொல்லவில்லை. முனைவர் திருவாசகம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த மாணவர்களின் வாழ்க்கைக்கு அவர்தான் பதில் சொல்லி ஆக வேண்டும்… அதற்கு இந்த செய்தி செய்தித்தாளில் வந்தாக வேண்டும்

  4. வாழ்க பாரதம் வெல்க பாரதி பல்கலை

  5. நமக்குத் தெரிந்து இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், தெரியாமல் எத்தனை பேரோ…!
    கண்டிப்பாக அந்தத் தவறைச் செய்த மனிதர் தண்டிக்கப்பட வேண்டியவர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு மாற்றுவழி உடனடியாகச் செய்யப்படவேண்டும்!

  6. I am Soory to oppose your opinion and writing in English I dont know how to type this in Tamil.The examinations held on same date 07.06.2008 for 2007-2008 regular and also for students prior to 2007-2008 so mentioning as ‘examinations’ is right according to it. Then they have said to be held on 07.06.2008 means only the exam on that date they have not mentioned exams in dates from 07.05 2008 to some date.It the people who have wrongly understood has not gone to exams how the rest have rightly attended the exams.So it the mistake of the two people who wrongly had thought all exams are posponed. The University could have clearly mention the word ‘only’ the exams on 07.06.2008 posponed and also ‘rest of the exams will be held as scheduled’.When I first read the University message I could rightly take what they meant to say that 07.06.2008 exam is posponed to 14 or for prior 2007-08 bactch to 27th.Then I read ur complaint and read it once again and came to the conclusion that you have wrongly understood the matter.But I feel sorry for you & your friends.

  7. Saravanan, I Welcome your opinion…

    1. By your statement, you are agreed that University should have clearly mentioned the words “Only” and “rest of others”.

    2. Why did the University people reply the same thing when my friends asked through phone…. this shows the carelessness of the people who have answered when they didn’t know clearly. Instead they should have told to come there and make it clear.

    apart from all of these, I am strongly supporting to the students (not just because of they are my friends and when i was working as an assistant professor I support students). It is the University, College, Staff’s responsibility to take care of the students. Once the fatal happens it cannot be rolled back…. Its all the life of students.

    If I am the authority, I will dismiss the people those who have done this mistake and publish it so it won’t happen in future!

  8. Even after calling to the University the officials had given a wrong information or not clearly answered means it is the mistake with University and the people working there. We cant blame the students for what had happened.

  9. இந்திய கல்வி நிலையங்களின் இணையத்தளங்கள் எடுப்பார் கைப்பிள்ளை தான்! வருந்தத்தக்க விஷயம். கண்டிப்பாக நடத்த விவரத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னால் நடவடிக்கை எடுப்பார்கள். கேஸ் போட போறோமுனு சும்மா சீன் போட்டு பாக்கலாம். பலர் பாதித்திருந்தால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

  10. Hai bmurali80,

    “கேஸ் போட போறோமுனு சும்மா சீன் போட்டு பாக்கலாம். பலர் பாதித்திருந்தால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுப்பார்கள்”

    இது மிகவும் தவறு,

    ஒருவர் பாதித்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து….

    இப்படிக்கு
    க.சக்திவேல்

  11. சக்திவேல் -

    ஒருத்தர் கேஸ் போடலாம் என்ன நடக்குதுனும் பார்க்கலாம். கொஞ்சம் உண்மையான உலகிற்கு வருவோமா? உங்கள் idealistic views ஏட்டுச்சுறைக்காய்க்கு சமம்!


Leave a Reply