கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க
அதற்குத் தக
கொஞ்சம் பொறுங்கள்… குறளைப் படித்துவிட்டு என்னைத்திட்டாதீர்கள். நான் சொல்வது நம் நாட்டின் கல்விநிலையை அன்று திருவள்ளுவர் கண்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.
பாரதியார் பல்கலைக்கழத்தின் சமீபத்திய வீர விளையாட்டுக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வேலைக்குச் செல்லும் இளம்வயதினர் முதல் மூத்தோர் வரை அனைவரும் தன் விட்டுப்போன படிப்பைத்தொடர உதவுவதுதான் தொலைக்கல்வி இயக்கம். சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன (நான் இதை எழுதும்போது, ஆதாவது ஜுன் 10, 2008 ) [...]