அளவுக்கு மிஞ்சினால்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது. தொடர்ந்து படிக்கவும்…
தமிழ் என்றாலே இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த பிணைப்பு என்பதை தொன்றுதொட்டு நாம் அறிந்து வந்திருக்கிறோம். தமிழ்ப்பாடங்களைக்கூட பாடல்களாகவும் நாடகமாகவும் தான் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தின் இன்றைய வடிவம்தான் திரைப்படங்கள். ஆனால் அவைகள் பல்கலைக்கழகங்களாலேயே தடை செய்யப்படும் அளவுக்கு கேவலமான நிலையை அடைந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து கடைசியில் அசிங்கம், ஆபாசத்தின் மொத்த உருவமாக இன்றைய திரைத்துறை வந்துவிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களைத் தவிர எல்லா மொழிமக்களும் நடிக்கிறார்கள். தமிழ் மொழியைத்தவிர எல்லா மொழி வாசகங்களையும் போட்டுப் பாட்டு எழுதுகிறார்கள். பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்கிறார்கள் அதுவும் வரிவிலக்குக்காக மட்டும்தான். கேவலமான அரசாண்மைக்கு இந்த வரிவிலக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெயர் மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படத்தில் ஒருவர் வாயிலும் அழகான தமிழ் வார்த்தைகள் வரவில்லை.
பல்(கலை)க் கழகங்கள் தங்களுடன் இணைந்துள்ள கல்லூரிகளில் விழாக்களின் போது தமிழ் திரைப்படப்பாடல்களே இடம்பெறக்கூடாது என்று சட்டம் போடுமளவுக்கு இந்தப்பாடல்களில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. இது போதாது என்று திரைப்பட நாயகர் நாயகிகளையும் அழைத்து அவர்களை ஆடவைக்கின்றன பல கல்லூரிகள், உதாரணமாக கோவையிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியைச் சொல்லலாம்.
அவர்களோடு சேர்ந்து நடனமாட கல்விகற்கவந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப் படுகிறது. அது அளவுக்கு மீறிப் போனதால் தான் இந்தத் தடை உத்தரவு வந்திருக்கிறது. எவ்வளவோ அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் மற்றும் பல மாமனிதர்களை அழைக்க இவர்களுக்குத் தோன்றவில்லை!
இப்போது அந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கே தடை உத்தரவு வந்திருக்கிறது எதற்குத் தெரியுமா? இளம்பொறியியல் (B.E., B.Tech.) படிப்புகளை அளிக்கும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் இளம் அறிவியல் (B.Sc) படிப்புகளை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கக்கூடாதென்று. ஏதோ ஒருசில புராதானக் கல்லூரிகள் B.Sc. CT, B.Sc., IT, M.Sc., CT, M.Sc., IT போன்ற பட்டப்படிப்புகளை அளித்து வந்தன. உதாரணத்துக்கு PSG Tech, CIT போன்ற கல்லூரிகளைச் சொல்லலாம்.
கோவை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டவுடன் அதற்குத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திரு. இராதா கிருட்டினன் என்ற மனிதரால் வந்தது இந்த வினை. தான் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கிய பதவியை வைத்து, விட்ட காசைத் திரும்ப எடுக்கும் நோக்கில் எல்லாக் கல்லூரிகளையும் இந்த இரண்டுங் கெட்டான் பட்டப் படிப்புகளைப் பெற விண்ணப்பிக்குமாறு உசுப்பிவிட்டார். கல்வியைக் காசாக்கும் நோக்கத்தில் முளைத்துவிட்ட கல்லூரிகளும் மேலும் மேலும் காசாசை கொண்டு அந்தப்பட்டப்படிப்புகளைப் பெற்றன. 2007ம் ஆண்டு இறுதியில் ஏறக்குறைய கோவையிலுள்ள அனைத்து பொறியியற் கல்லூரிகளும் இந்த இளைநிலை அறிவியல் (B.Sc., CT, IT)படிப்புகளைப் பெற்றுக் காசுவாங்க ஆரம்பித்துவிட்டன. அந்த அனுமதிவழங்க துணைவேந்தர் அய்யா நிறைய வாங்கி, விட்ட காசையும் சம்பாதித்துக் கொண்டார். 2008ம் ஆண்டுக்கான வசூல் வேட்டையை கல்லூரிகள் ஆரம்பிக்கும் வேளையில் வந்தது புதிய ஆப்பு. ஆப்பு வைத்தது பாரதியார் பல்கலைக்கழகம். இந்தமாதிரி அறிவியல் பட்டங்களை பொறியியல் கல்லூரிகளில் அளித்தால் தன்னிடமிருக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டுதான் போகவேண்டும் என்று ஒரு வழக்கைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவியல் இளநிலை முதுநிலைப் பட்டங்களை வழங்க தடை உத்தரவு வந்தேவிட்டது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறியியல் கல்லூரிகள் நடத்திய இந்தப் படிப்புக்களை இத்தனை கல்லூரிகள் போட்டிபோட்டு மலிவாக்கியதன் விளைவுதான் இது. பல கல்லூரிகள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைக் கூட ஆரம்பித்துவிட்டன. இப்போது அவர்களுக்குக் காசைத் திரும்பக் கொடுத்தார்களா இல்லை பொறியியல் பாடத்திற்கு அனுமதி தந்தார்களா என்று தெரியவில்லை.
ஆனாலும் அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரிகள் பல உள்ளதால் அவர்களின் நன்மைக்காக இந்தத் தடை விரைவில் நீக்கப்படும் என்பது திண்ணம்.
“கேடுகெட்ட ஊருக்கு கூறுகெட்ட மணியகாரன்” என்கிற கதைதான் இது! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.
Loading...
You could have woerked little more better in editing this content.
there is no proper flow.
we expect more from you Ganesh.
karthik - ஜூலை 2, 2008 at 4:16 மு.பகல்
Super
sakthi - ஜூலை 2, 2008 at 4:16 மு.பகல்
there are many spelling mistakes know…………
vignesh - ஜூலை 2, 2008 at 5:48 மு.பகல்
it is very cute sir………
prem - ஜூலை 3, 2008 at 11:24 மு.பகல்
Excellent Sir…
bhuvaneswari - ஜூலை 3, 2008 at 3:55 பிற்பகல்
இன்றைக்கு ( 06.07.08 ) தி ஹிந்து நாளேட்டின் தலைப்பக்கத்தைப் படிங்க… ஒரே தமாசுதான் போங்க…
கணேஷ்ஜி, யாராவது கூகுள் மொழிமாற்றியை கலைத்துவிட்டார்களா? எல்லா எழுத்தும் மாறிமாறி வருது…
Rathnavel - ஜூலை 6, 2008 at 9:46 மு.பகல்
nice…….
vimal - ஜூலை 6, 2008 at 4:25 பிற்பகல்