என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

Archive for April, 2008

மலைச்சரிவு

April 29, 2008

இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?
இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் [...]

பிச்சைக்காரர்களா இவர்கள்!

April 4, 2008

என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை இயந்திரம், துணிநேர்த்திப்பெட்டி, ஒளிபடவட்டு (CD/DVD) இயக்கி முதலானவைகளும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியுமா…?
பிச்சை எடுப்பது!
ஆம். ஆச்சரியமாக இருக்கிறதா…? கேட்டதும் நொந்து போனேன். தினமும் காலை [...]